அஜீத் படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா விலகினார்- வீடியோ

2018-01-03 3,714

அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கி, தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா தான் 'விசுவாசம்' படத்தின் இசையமைப்பாளர் என படத்தின் பூஜை புகைப்படத்தை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் அறிவித்தது. தற்போது யுவன் விசுவாசம் படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. அஜித், இயக்குனர் சிவாவுடன் அடுத்ததாக இணைவது உறுதியாகிவிட்டது. இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் இப்படத்தில் ஒன்றிணைகிறார்கள். விவேகம் படத்தின் விமர்சனங்களால் ரசிகர்கள் சிலருக்கு 'அஜித் - சிவா' கூட்டணி அதிர்ச்சியாக இருந்தது என்றே சொல்லலாம். இதனை தொடர்ந்து விசுவாசம் படத்தில் யுவன் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அஜித் - யுவன் ஷங்கர் ராஜா என 'மங்காத்தா' கூட்டணி மீண்டும் இணைந்ததால் மகிழ்ச்சியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா படத்திலிருந்து விலகிவிட்டதாக வெளிவந்த இந்தச் செய்தி கொஞ்சம் அதிச்சியளித்துள்ளது.
யுவன் படத்திலிருந்து விலகியிருப்பதால் அனிருத் அல்லது சாம் சி.எஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் படக்குழு சார்பில் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Videos similaires