மெர்சல் படத்தால், அதிருப்தியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் !!- வீடியோ

2018-01-03 5,326

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து வெளியான 'மெர்சல்' திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வசூலைக் குவித்தது.

மெர்சல் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் ரூ 255 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், படம் வெளியாகி சில மாதங்களே ஆகும் நிலையில் மெர்சல் படத்தை பொங்கல் அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பவிருப்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

'மெர்சல்' படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே உற்சாகமான ரசிகர்கள் படத்தின் டீசர், போஸ்டரை பயங்கர ஹிட்டாக்கியதோடு இல்லாமல் படத்தையும் செம சூப்பர்ஹிட் ஆக்கி விஜய்யை மகிழ்ச்சிப்படுத்தினர்.

விஜய் தனக்கென்று பிரமாண்ட மாஸ் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். 'மெர்சல்' படக்குழுவின் வெறித்தன உழைப்பால் மெர்சல் அரசன் உலகம் முழுவதும் கெத்து காட்டினார். இன்னும் சில தினங்களில் விஜய் ரசிகர்கள் நூறாவது நாளை கொண்டாட இருந்தனர்.

மெர்சல் படம் திரைக்கு வந்து 100 நாட்கள் ஆக இருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் ரூ 255 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் 100-வது நாள் சமயத்தில் மெர்சல் படத்தை பிரபல தொலைக்காட்சி ஒன்று பொங்கலுக்கு ஒளிப்பரப்புகின்றது.


Vijay starrer 'Mersal' released for diwali and hits big in the box office. The film grossed Rs 255 crore at the box office. In this scenario, Mersal will be aired for Pongal on TV. So, the fans have been dissatisfied with 'Mersal' team.

Videos similaires