கொண்டை போட்டு வந்த கீர்த்தி சுரேஷ், மரண கலாய் கலாய்த்த ரசிகர்கள்- வீடியோ

2018-01-03 10,301

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு கொண்டை போட்டு வந்த தன்னை மக்கள் கலாய்த்தது வலித்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படமான அஞ்ஞாதவாசியின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. விழாவுக்கு கீர்த்தி சுரேஷ் வித்தியாசமாக வந்ததை பார்த்த மக்கள் அவரை கலாய்த்தனர். இது குறித்தும், தனது படங்கள் குறித்தும் கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது, நான் சாமி 2 படத்திற்கு ஓவராக சம்பளம் கேட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. நான் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை தான் இந்த படத்திற்கும் கேட்டேன். த்ரிஷா ஏன் சாமி 2 படத்தில் இருந்து வெளியேறினார் என்று எனக்கு தெரியாது. அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். ஹரி என்னை அணுகியபோது சாமி 2 படத்தில் த்ரிஷா இருக்கிறாரா என்று தான் முதலில் கேட்டேன். அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை.

People made fun of Keerthy Suresh's look during the launch of telugumovie audio launch agnyathavasi. and it got to her. keerthi suresh is currently acting in sami 2 as well as sandakozhi 2.

Videos similaires