சில விநாடிகளில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜீரோ'.. டீசர் வெளியீடு!- வீடியோ

2018-01-03 1,568

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக நடிகைகள் கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் ஷாருக்கான், குள்ள மனிதராக நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், படத்திற்கு தலைப்பு வைக்காமலே படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில் படத்திற்கு 'ஜீரோ' என்று பெயரிட்டுள்ளனர். இந்தத் தகவலை ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஓடும் டீசரையும் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் ஷாரூக்கான் குள்ள மனிதராக ஆடிப்பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷாரூக்கானின் தோற்றம் கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான 'ஜீரோ' டீசர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி 'ஜீரோ' படம் ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sharukh Khan recently released on his twitter page the new movie zero's trailer. He is acting as a midget in the movie. Katrina Kaif and Anushka Sharma are playing the female lead roles.

Videos similaires