கந்து வட்டி கொடுமை கணவன் மனைவி விஷமருந்தி தற்கொலை- வீடியோ

2018-01-02 247


கந்து வட்டி கொடுமை தாங்காமல் கணவனும் மனைவியும் நடு ரோட்டில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை இந்திரா நகரை சேர்ந்தவர் கேசவன். ஸ்கிரீன் பிரிண்டிங் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிலுக்கு பணம் தேவைப்பட்டுள்ளதால் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணத்தால் பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் போயுள்ளது. வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் சேகவனிடம் பணத்தை திரும்பி தரும்படி நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கேசவன் தனது மனைவியுடன் கொடைரோடு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு கடை ஒன்றில் விஷமருந்தை வாங்கி சாலையின் ஓரத்தில் நின்று மனைவி இந்திராவிடம் கொடுத்து குடிக்க கூறியுள்ளார். மனைவி இந்திராவும் விஷத்தை குடிக்க சிறிது நேரத்தில் இந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்திரா இறந்த உடன் அதே விஷத்தை கேசவன் சாப்பிட்டும் கத்தியால் தன் கழுத்தை அறுத்தும் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கேசவனை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் கேசவனும் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் கந்து வட்டி கொடுமையால் கணவனும் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Videos similaires