ஆண்டிபட்டி அருகே சொத்துத் தகராறு காரணமாக தந்தை மற்றும் மகளை காரை ஏற்றி உறவினரே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் காரை ஏற்றி கொலை செய்த ரமேஷ் குமாரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.
செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான ரமேஷ்குமாருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சொத்துத்தகராறு இருந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டைபோட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.ரமேஷ்குமார் தொடர்ந்து பிரச்சனை செய்து வருதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் செல்வராஜ், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.