தோனி கூட சென்னை அணியில் களமிறங்குவது யார் தெரியுமா ?- வீடியோ

2018-01-02 18,553

இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தல டோணி தலைமையில் களமிறங்குவது ஏற்கனவே உறுதியாகி விட்டது. டோணியோடு வேறு யார் யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது தான் தற்போதைய ஹாட் டாபிக். சூதாட்டப் புகார்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு சீசனில் விளையாடவில்லை. அதனால், அந்த அணிகளுக்காக விளையாடிய வீரர்கள் வேறு அணிகளுக்காக விளையாடினர்.

இந்த நிலையில், இந்த தடைக் காலம் முடிந்து, இரண்டு அணிகளும், இந்த சீசனில் களமிறங்க உள்ளன. அதனால், ஏற்கனவே விளையாடிய வீரர்களை திரும்பப் பெறும் வகையில், ஐபிஎல் அணிகளுக்கு புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அணியும் தனக்காக விளையாடிய மூன்று வீரர்களை திரும்பப் பெறலாம். இதைத் தவிர, ஒரு வீரரை ரைட் டு மேட்ச்’ என்ற அடிப்படையில் வாங்க முடியும். இந்த சீசனில் சென்னை கிங்ஸ் களமிறங்குகிறது என்ற உடனேயே, வேறு எந்த மாற்றுக் கருத்தும் இல்லாமல் கேப்டன் கூல் டோணிதான் அந்த அணிக்கு கேப்டன் என்பது உறுதியாகி விட்டது.

Teams are busy in preparing list of players to be retained

Videos similaires