அரசியல் அறிவிப்பையடுத்து அதிரடி.. வாக்காளர்களை ஒருங்கிணைக்க வெப்சைட் தொடங்கினார் ரஜினிகாந்த்! - Rajini Mandram
https://rajinimandram.org
தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, www.rajinimandram.org என்ற இணையதளத்தை தொடங்கி டுவிட்டரில் வீடியோவை ரஜினி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரஜினி கூறுகையில், அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு முக்கிய அறிவிப்பு, எனது பதிவு செய்யப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், பதிவு செய்யப்படாத ரசிகர் மன்ற உறுப்பினர்களையும் தமிழகத்தில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வர விரும்பும் மக்களையும் ஒருங்கிணைத்து ஒரு குடைக்குள் கொண்டு வரவேண்டும்.
அதற்காக www.rajinimandram.org என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளேன். அதில் உங்களது பெயர், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பதிவு செய்து உறுப்பினராகலாம். தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வரலாம். வாழ்க தமிழக மக்கள், வளர்க தமிழ்நாடு என்று கூறியுள்ளார். மேலும் மொபைல் ஆப் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. https://drive.google.com/file/d/1SkXCPgSq85z8CjyuPsF1GIFOoHsHMYmT/view?usp=sharing