ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த சாதகமோ பாதகமோ கிடையாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்டாலின் ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு எந்த சாதகமோ பாதகமோ கிடையாது என தெரிவித்துள்ளார். சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் அதனை கடந்து வரும் திறன் திமுகவுக்கு உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Stalin wishes Rajinikanth political arrival. He also says There is no pros and cons for DMK by Rajinikanth arrival.