வரும் ஜனநாயகப் போரில் நமது படையும் இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை கேட்டதும் ராகவேந்திரா மண்டபம் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ரஜினியின் அறிவிப்பால் சென்னை ராகவேந்திரா மண்டபம் அமைந்துள்ள கோடம்பாக்கம் ஏரியா விழாக்கோலம் பூண்டுள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்பை தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Rajinikanth fans celebrating his political arrival by burning crackers and giving sweets.