உள்ளாட்சி தேர்தலில் போட்டி இல்லை.... 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டி

2017-12-31 1,374

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டேன். சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி தனித்து போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார்.
இன்று ரஜினி பேசுகையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ரஜினி அறிவித்தார். வரும் சட்டசபை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிப்பேன்.

தமிழகம் முழுக்க 234 தொகுதியிலும் போட்டியிடுவேன். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் நான் முடிவெடுப்பேன். பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை. 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா. அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன்.

நான் ஆன்மீகவாதி என கூறுவதற்கு தகுதியற்றவன். பதவி ஆசை இருந்திருந்தால் 1996லேயே பதவி என்னை தேடி வந்தது. ஆனால் நான் விரும்பவில்லை என்றார் அவர்.

Rajinikanth says that he will not compete in Civic polls. He speaks among fans club meeting.

Videos similaires