இந்த வருடத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற நாயகிகளில் ஒருவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் எங்கும் பிரபலமானார் ஓவியா. கமல்ஹாசன் நடத்திய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது தனித்துவமான கேரக்டரால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தனது சம்பளத்தை உயர்த்தி நிறைய படங்கள் கமிட்டாவது, விளம்பரப் படங்களில் நடிப்பது என மிகவும் பிஸியாக இருக்கிறார்.
இந்த வருடம் ரசிகர்களால் அதிகம் பாடப்பட்ட 'ஜிமிக்கி கம்மல்' பாடல். மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலுக்கு கேரளாவைச் சேர்ந்த ஷெரில் எனும் ஆசிரியை தனது குழுவினருடன் ஆடியது செம ட்ரெண்ட் ஆனது.
'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு பிரபலங்கள் பலரும் டான்ஸ் ஆடிய நிலையில், தற்போது அந்தப் பாடலின் இசைக்கு ஓவியா நடனம் ஆடியுள்ளார். இது ஜவுளிக் கடை ஒன்றின் விளம்பரப் படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது.
Actress Oviya became famous by participated in 'Biggboss' show. 'Jimikki kammal' malayalam song is gone viral on social media. Now, Oviya danced to the 'Jimikki kammal' song for textiles company advertisement.