தினகரனின் தூதை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி... இனி கச்சேரி ஆரம்பம்...

2017-12-30 16,458

என்னை முதல்வராக்குங்கள், சமாதானமாக போய்விடலாம் என்ற டிடிவி தினகரன் யோசனையை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமாதான முயற்சி தோற்றதும், போருக்கான சங்கநாதம் முழங்கப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள் அதிமுக வட்டாரத்தில். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதுமே, தான்தான் முதல்வர் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாராம் தினகரன்.

மத்திய, மாநில அரசுகள் போட்ட முட்டுக்கட்டைகள், தேர்தல் ஆணைய கெடுபிடிகளை தாண்டி, ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றி தினகரனுக்கும், அவரது ஆதரவாளர்களும் அளவில்லாத உற்சாகத்தை அளித்து உள்ளது. இதனால், அவர்களின் அடுத்த குறி, கோட்டை நாற்காலிதான். இதையடுத்து, மத்தியிலும், மாநிலத்திலும் தூது விடுகிறதாம் தினகரன் தரப்பு.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வெற்றியின் மூலம், அதிமுக தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது நிரூபணமாகிவிட்டதால், எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள், நாங்கள் எடப்பாடி இடத்தில் இருந்து உங்களுக்கு தேவையானதை செய்து தருகிறோம்.

Sources says that the Palanisamy and Panneerselvam faction refused to accept the TTV Dinakaran's idea of peace.