சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் இன்று காலையில் ஆட்சியர், வட்டாட்சியர் சுமார் 2 மணி நேரம் ஆய்வு நடத்திச் சென்றுள்ளனர். இவர்களோடு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் போயஸ் கார்டன் வந்திருந்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று ஆகஸ்ட் மாதத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தங்களின் பூர்வீக சொத்து என்பதால் இதனை நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி ஜெ. தீபா அரசு தலைமைச் செயலரை சந்தித்து போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்த நிலையில், இன்று காலையில் வேதா இல்லம் முன்பு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேதா இல்லத்திற்கு வந்தனர்.
Chennai Collector, revenue officials, pwd officials and Income tax officials were at Poes garden, it seems the memorial conversion process begins.