தினகரன் அடுத்த முதல்வர் ஆகிறாரா ? ஸ்லீப்பர்செல்கள் மூலம் பக்கா பிளான் ரெடி

2017-12-30 29,077

எடப்பாடி அரசு விரைவில் கவிழ்க்கப்படும் என்றும் அதற்கடுத்து தமிழகத்தின் முதல்வராக தினகரன் அரியணை ஏறுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக இணைய வேண்டும் என்பதற்காக தினகரனையும், சசிகலாவையும் எடப்பாடி அணியினர் ஓரங்கட்டினர். இது அவர்களின் ஆதரவாளர்களை எரிச்சல் அடைய செய்தது. ஊழல் செய்யும் எடப்பாடி அரசு என்று புகார் கூறிய ஓபிஎஸ் அணியுடன் முதல்வர் அணி சேர்ந்தது அவர்களுக்கு உறுத்தியது. இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனுவாக கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று 18 பேரையும் சபாநாயகர் தனபால் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை எதிர்த்து தினகரன் அணியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு ஜனவரி 20-ஆம் தேதிக்குள் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தினகரன் ஆர்கே நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.
தினகரன் 89,013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுவிட்டார். இது ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்நிலையில் அவர் எப்போது பேட்டி கொடுத்தாலும் ஸ்லீப்பர் செல்கள் குறித்து பேசுவார்.

Edappadi government will be dissolved within few months. Dinakaran will become CM of Tamilnadu.

Videos similaires