டிவிட்டரில் கோபம் காட்டிய ஷிகர் தவான்- வீடியோ

2017-12-29 10,314

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் நீண்ட தொடர் வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மொத்தம் 3 டெஸ்ட், 6 ஒருநாள் மட்டும் 3 டி-20 போட்டிகள் விளையாடும். இதில் விளையாட இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்று இருக்கிறது. இன்று காலை மும்பையில் இருந்து துபாய் வழியாக ஷிகர் தவான் தென்னாபிரிக்க சென்று இருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்திற்கு மட்டும் விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
மும்பையில் இருந்து துபாய் வரை செல்ல ஷிகர் தவான் குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் துபாயில் 'பிளை எமிரேட்ஸ்' நிறுவனம் ஷிகர் தவான் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை கேட்டு உள்ளது. தாவன் எவ்வளவு பேசியும் அவர்களை விமானத்தில் அனுமதிக்காமல் போய் உள்ளனர். இதனால் அவர் மட்டும் தனியாக தென்னாப்பிரிக்கா சென்று உள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டரில் ''கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. தென்னாப்பிரிக்கா சென்று கொண்டு இருந்தேன். என் குழந்தைகளும், மனைவியும் பிறப்பு சான்றிதழ் இல்லாத காரணத்தால் விமானத்தில் செல்ல முடியாது என்று கூறிவிட்டார்கள். அப்போது எங்களிடம் எதுவுமே இல்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.



India opener Shikhar Dhawan and family had to undergo an unexpected ordeal at the Dubai airport en route South Africa. The episode forced Dhawan to lash out at the airlines - Emirates- through his official twitter account in a two-part series.