கர்நாடகாவை சேர்ந்த இளம் நடிகர் ஒருவர் தன் காதலியை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார். சுப்ரமண்யா என்ற அந்த கன்னட நடிகர் தற்போது தலைமறைவாகி உள்ளார். போலீசார் இவரை தீவிரமாக தேடி வருகின்றனர். வளரும் நடிகரான இவர் 'ஹோம்பன்னா' என்ற கன்னட படம் ஒன்றில் நடித்து இருக்கிறார். இவர் தன்னை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வன்புணர்வு செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அதேபோல் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
கன்னட திரைப்பட உலகில் 'ஹோம்பன்னா' என்ற படத்தில் நடித்தார் சுப்ரமண்யா என்பவர். இவருக்கு பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பின் இது காதலாக மாறியுள்ளது. இது இருவரின் குடும்பத்திற்கும் தெரிந்ததை அடுத்து திருமணம் குறித்த பேச்சுக்கள் எழுந்து இருக்கிறது.
ஆனால் திருமணம் செய்ய சுப்ரமண்யா மறுப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் முதல்படமான 'ஹோம்பன்னா' வெளிவந்த பின்பே திருமணம் பற்றி பேசமுடியும் என்றும் கூறியுள்ளார். ஆனால் படம் வெளி வந்த பின்பும் திருமணம் செய்ய மறுத்துள்ளார். வீடு கட்டிய பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.