தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவர்களின் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது . இந்த திட்டத்திற்கு 210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Chief minister Edapadi palanisami has announced Pongal gift for ration card holders . Tamilnadu govt has alloted Rs 210 crors for pongal gift .