அஸ்வின் பவுலிங் ஸ்டெயிலை கலாய்த்த ரஹானே- வீடியோ

2017-12-29 11,601

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட சென்று இருக்கிறது. இந்திய வீரர்கள் அனைவரும் நேற்று இரவு தென்னாப்பிரிக்காவிற்கு சென்றடைந்தனர். இந்தியா அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடாது என்பதால் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக கோஹ்லி மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இருக்கும் அஸ்வின் மற்றும் ரவீந்தர் ஜடேஜா குறித்து ரஹானே கருத்து தெரிவித்து இருக்கிறார். அஸ்வின் தனது பவுலிங் ஸ்டைலை மாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் நீண்ட தொடர் வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மொத்தம் 3 டெஸ்ட், 6 ஒருநாள் மட்டும் 3 டி-20 போட்டிகள் விளையாடும்.

Videos similaires