ராகவேந்திரா மண்டபத்துக்கு வெளியே காலா ரஜினி!- வீடியோ

2017-12-29 5,029

ரஜினிகாந்த், தனது ரசிகர்களை நான்காவது நாளாக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து உரையாற்றி அவர்களோடு புகைப்படம் எடுத்து வருகிறார். அதன்படி இன்று, கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். அவர்கள் மத்தியில் பேசி, புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார் ரஜினி. ரஜினிகாந்த் கடந்த மே மாதம் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இப்போது இரண்டாவது கட்டமாக தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வருகிறார்.

ரஜினியை சந்திக்க அழைக்கப்பட்டிருக்கும் ரசிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களும் வரிசையாக வந்து ரஜினியோடு இன்று புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.

ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகர்கள் பலர் அவரைச் சந்தித்து வருகின்றனர். நேற்று முகத்தில் ரஜினி உருவத்தை வரைந்த ரசிகர் ஒருவரும் ரஜினியை சந்தித்தார். அதற்கு முன்தினம் ஒரு ரசிகர் ரஜினியை கடவுளை சுற்றுவதைப் போல சுற்றி வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.





Rajinikanth meets his fans at Raghavendra mandapam. At this scenario, A Rajini fan look alike kaala rajini at near Raghavendra mandapam. Superstar Fans wondered and take selfie with him.

Videos similaires