தனது வீடு மற்றும் கட்சி அலுவலகத்தை மர்மநபர்கள் தாக்கியதாக தெரிவித்த ஜெ.தீபா அளித்த புகார் பொய்யானது என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன், தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தனது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைமை அலுவலகத்தை சில மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி சேதம் ஏற்படுத்தியதாக அதன் பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ.தீபா மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், இந்த வழக்கில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தீபா பேரவை நிர்வாகி ராமச்சந்திரன் தான் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் அந்த வழக்கின் மீது விசாரணை மேற்கொண்டார்.
அப்போது ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையில், தனக்கு தீபா தர வேண்டிய பணத்தை கேட்டதை அடுத்து தன்னை போலீஸில் மாட்டிவிட திட்டமிட்டு சதி செய்திருப்பதாக கூறி அதற்கான ஆதாரங்களையும் போலீஸாரிடம் சமர்பித்தார். இதனையடுத்து அந்தப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய போலீஸார் முடிவு செய்தனர்.
Police found in investigation that J Deepa filed a false Complaint. J Deepa is the Relative of Late J Jayalalithaa and she is the General Secretary of MGR Amma Deepa Peravai.