தினகரனுக்கு போட்டியாக கிருஷ்ணபிரியாவை தயார் செய்யும் சசிகலா!- வீடியோ

2017-12-29 1

ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வரும் விசாரணை கமிஷனிடம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை கிருஷ்ணப்பிரியா மூலமாக தாக்கல் செய்ய சசிகலா முடிவு செய்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் அரசு சார்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த கமிஷனின் விசாரணை ஆர்.கே.நகர் தேர்தலை தொடர்ந்து சூடுபிடிக்க ஆரம்பித்தது. டிடிவி தினகரன், சிறையில் உள்ள சசிகலா, கிருஷ்ணப்பிரியா உள்ளிட்டோரும் நேரில் ஆஜராக கூறி ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் முன் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா நேரில் ஆஜராகாமல் தன்னிடம் உள்ள ஆவணங்களை இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா மூலமாக ஆணையத்திடம் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக ஆணையத்திற்கு அவர் இமெயில் மூலம் தகவல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிருஷ்ணப்பிரியாவிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரும் 2ம் தேதி ஆறுமுகசாமி கமிஷன் முன் ஆஜராகும் போது அவர் இந்த ஆவணங்களை வழங்குவார் என்றும் கருதப்படுகிறது. இதற்கான அங்கீகார கடிதத்தை விரைவில் சசிகலா கிருஷ்ணப்பிரியாவுக்கு வழங்குவார் என்றும் கருதப்படுகிறது.

As ADMK has no face valued female leaders, sasikala is trying to boost up her niece Krishnapriya in the race. She is taking place in the headlines recent times, its expected she will be given a position in the party soon. Sasikala as decided to give the evidence of jaya medical probe to the Arumugasami commision through krishanapriya.

Free Traffic Exchange

Videos similaires