கதறி அழுத தாடி பாலாஜி- வீடியோ

2017-12-29 2

நடிகர் தாடி பாலாஜி தனது மகள் போர்ஷிகாவை நினைத்து டிவி நிகழ்ச்சியில் அழுதுள்ளார். நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். தாடி பாலாஜி தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது நித்யா தனது மகள் போர்ஷிகாவுடன் தனியாக வசித்து வருகிறார்.

தாடி பாலாஜி கிங்ஸ் ஆப் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளை பாராட்டி பேசியபோது தனது மகள் போர்ஷிகாவின் நினைவு வந்து அழுதுவிட்டார்.

தன்னையும், மகள் போர்ஷிகாவையும் ஒரு அறையில் அடைத்து வைத்து தாடி பாலாஜி கொலை செய்ய முயன்றதாக நித்யா பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.

நித்யாவும், போர்ஷிகாவும் ஒரு அறையில் இருக்க தாடி பாலாஜி வெளியே தீ வைத்ததால் அந்த அறையில் புகை வர இருவரும் மூச்சு திணறுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.



Actor Balaji cried in a TV programme saying that he misses his daughter Porshika. Porshika is living with her mother Nithya.

Videos similaires