விமான நிலையத்தில் பயணிகளை விமானம் வரை அழைத்து செல்லும் பேட்டரி காரில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு விமானத்தில் விடுவதற்காக பேட்டரி கார் ஒன்று புறப்பட்டது. அவர்களை விட்டுவிட்டு திரும்பி கொண்டிருந்தது.
அப்போது அந்த பேட்டரி காரில் தீ பிடித்தது. இதையடுத்து அங்கிருந்த தீத்தடுப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சில நிமிடங்கள் போராடி தீ அணைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே தீவிபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
incident happen takes place in Chennai Airport's battery car which takes passengers to flight take off area. No casualities reported