சென்னையில் சுரங்க பாதையில் பேருந்து சிக்கியதால் பரபரப்பு- வீடியோ

2017-12-28 2

சென்னை தி நகரில் உள்ள துரைசாமி சுரங்க பாதையில் சொகுசு பேருந்து சிக்கியுள்ளதால் பாலத்தில் விரிசல் ஏற்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள சுரங்க பாதையில் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மாம்பாலம் நோக்கி சென்ற அந்த தனியார் பேருந்து திடீரென சிக்கிக் கொண்டது. பகல் நேரத்தில் தனியார் பேருந்துகள் நுழைய கூடாது என்ற விதியையும் மீறி அந்த பேருந்து நுழைந்ததால் தற்போது அதை எடுப்பதில் பிரச்சினை எழுந்துள்ளது.

அந்த பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து அந்த பேருந்தை எடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பேருந்தை பின்னோக்கி அல்லது முன்னோக்கி இயக்க டிரைவர் முயற்சித்தார். ஆனால் பேருந்தின் மேற்கூரையின் உயரம் அதிகமாக இருப்பதால் அது வசமாக சிக்கிக் கொண்டது. இதனால் முன்னுக்கோ பின்னுக்கோ பேருந்தை இயக்கும்போது பாலத்தில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டுள்ளது.

Deluxe bus trapped in Duraisamy subway, T.Nagar, Chennai. If the driver operates the bus, then bridge begins to crack, so traffic jam in that place.

Videos similaires