ஜெ.,மரணம்-தினகரன் பேட்டி- வீடியோ

2017-12-28 1,114

ஜெயலலிதா மரணத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்றும் வீடியோவை வெளியிட்டதற்கு ஜெ.வின் ஆன்மா வெற்றிவேலை மன்னிக்கும் என்றும் தினகரன் கூறினார். ஜெயலலிதா கடந்த ஆண்டு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது புகைப்படமோ வீடியோவோ தமிழக மக்களுக்காக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, டிசம்பர் 5-ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி, அதாவது இடைத்தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னர், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை எடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் நைட்டி உடை அணிந்துள்ள ஜெயலலிதா இடது கையில் ஜூஸ் குடித்து கொண்டே டிவி பார்ப்பது போன்ற காட்சிகள் சுமார் 20 வினாடிகள் இடம்பெற்றிருந்தன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Videos similaires