கையில் காசு இல்லை பட்டசு தொழிலாளர்கள் குமுறல்- வீடியோ

2017-12-28 121


சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து பட்டாசு விற்பணையை விலக்கு அளிக்க கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி அன்றாட செலவுக்கு கூட பணம் இன்றி தவித்து வருகின்றனர்.

பட்டாசுகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதால் வட மாநிலங்களில் கடந்த ஆண்டு முதல் பட்டாசு விற்பணை தடை செய்யப்பட்டது. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டும் தொடர்ந்து தடை நீடிப்பதால் வட மாநிலத்தை சேர்ந்த பட்டாசு விற்பணையாளர்கள் பட்டாசுகளை ஆட்டர் கொடுப்பதில் தயக்கம் காட்டியுள்ளனர். இதனால் தங்களின் தொழில் மிகவும் நெலிவடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி சிவகாசி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் வேலை இன்றி கடந்த மூன்று நாட்களாக தவித்து வருகின்றனர். கையில் செலவுக்கு கூட காசு இல்லாமல் தவித்து வரும் தொழிலாளர்கள் மத்திய மாநில அரசுகள் பட்டாசு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Des : Fireworks manufacturers have been on strike for the 3rd day demanding the removal of crackers from the environmental protection law. Thus, thousands of workers are suffering from unemployment, even without daily pay.

Free Traffic Exchange

Videos similaires