இரண்டு வருடமாக திருமணமானதையே மறைத்து வைந்திருந்த நடிகை !!- வீடியோ

2017-12-28 6,994

நடிகை சுர்வீன் சாவ்லா தனது காதலரை ரகசிய திருமணம் செய்துள்ளார். சன்டிகரை சேர்ந்தவர் சுர்வீன் சாவ்லா. மூன்று பேர் மூன்று காதல் படம் மூலம் கோலிவுட் வந்தார். புதிய திருப்பங்கள், ஜெய்ஹிந்த் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தி, பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சுர்வீன் தனது காதலர் அக்ஷயை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு தான் திருமதியான செய்தியை ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
நீ பாதி நான் பாதி என்று காதல் வசனத்தோடு கணவருடன் இருக்கும் மற்றொரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுர்வீன் சாவ்லா.
சுர்வீனுக்கு தற்போது அல்ல மாறாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இத்தாலியில் திருமணம் நடந்துவிட்டதாகவும், அதை இத்தனை நாட்கள் அவர் ரகசியமாக வைத்திருந்ததாகவும் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது சுர்வீன் தனது திருமண செய்தியை வெளியிட்டுள்ளார்.


Bollywood actress Surveen Chawla has married her boyfriend Akshay in a hush hush manner. She has released a couple of pictures of hers with hubby on social media.

Videos similaires