விசாரணை கமிஷனை அசால்டாக எதிர்கொள்ளும் சசிகலா- வீடியோ

2017-12-28 2,556

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அனுப்பிய சம்மன் மெயிலில் தானே வந்திருக்கிறது, நேரில் வந்த பின் பார்த்துக் கொள்கிறேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். சம்மன் குறித்து சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் கூறியதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளதாக தெரிகிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. நவம்பர் மாதம் தொடங்கிய இந்த விசாரணையானது திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணனிடம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் குழு, கைரேகை பதிவு பெற்ற டாக்டர் பாலாஜி உள்ளிட்டோரிடம் ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளார்

இதே போன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, தீபக், ஜெ. தீபாவின் கணவர் மாதவன் உள்ளிட்டோரிடம் விசாரணை ஆணையம் நேரில் விசாரணை நடத்தியுள்ளது. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து நேரில் விளக்கம் அளிக்குமாறு அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி ஆகியோருக்கு கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

Bangalore prison authorities informed Sasikala that she was summoned by Justice Arumugasamy commission through e mail, and she replied will respond to them after received sumon directly