ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்க ஆசைப்படும் ரஜினி- வீடியோ

2017-12-28 17

ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதில் மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

அப்போது பேசிய அவர், மதுரை என்றாலே வீரத்துக்கு அடையாளம். இரவு முழுவதும் பயணம் செய்து வந்த களைப்பே தெரியாமல் உற்சாகத்தோடு என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள். உங்களைப் பார்த்த உடன் எனக்கும் உற்சாகம் வந்து விட்டது. உங்களுக்கு எல்லாம் கடா வெட்டி கறி சோறு போட ஆசையாக உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால் இங்கு அது முடியாது வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்று கூறினார் ரஜினி.

Rajinikanth met his fans at Raghavendra Mandapam in Chennai on 3rd day. Fall in the legs of only GOD, Mother and Father. He told that his fans, He would like to give Keda Virunthu for fans(Non Vegetarian food).

Videos similaires