ஆர்கே நகர் தோல்விக்குக் காரணம் என்ன... செல்லூர் ராஜூ விளக்கம்- வீடியோ

2017-12-28 3,726

பாஜகவுடன் இணக்கமாக இருந்ததாலேயே ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிட்டதாகவும், பாஜகவை எதிர்த்ததாலேயே தினகரனுக்கு வெற்றி கிடைத்ததாகவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அதிமுகவினர் மத்தியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜகவுடன் இணக்கமாக இருந்தது தான் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்தோம். ஜெயலலிதா பாணியில் இனி பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.
பாஜகவினரும், மத்திய அமைச்சர்களும் அதிமுக பற்றியும், அதிமுக தலைவர்கள் பற்றியும் தவறாக பேசுவதை மக்கள் விரும்பவில்லை. பாஜகவை எதிர்த்ததாலேயே டிடிவி. தினகரனுக்கு ஆர்கே நகரில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள் அனைத்தும் கிடைத்து அவர் வெற்றி பெற்றார்.

ஒரே ஒரு முறை பாஜகவுடன் நாம் இணக்கமாக சென்றோம், அதற்கான தண்டனையை பெற்றுவிட்டோம். இனி அதிமுகவுடன் எந்த ஒட்டோ உறவோ வேண்டாம் என்றார்.



Tamilnadu ministerSellur raju says that join hands with BJP is the setbacck of ADMK in Rk nagar by polls hereafter like Jayalalitha way no relationship with bjp is the admk stand.

Free Traffic Exchange

Videos similaires