ஆர் கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரன் ஜோசியரிடன் அறிவுரையின் படி தனது அணியை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருசில எம்எல்ஏக்களுடன் சென்று நாளை மறுதினம் பதவி ஏற்க உள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழ்களை தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் வழங்கினார். அச்சான்றிதழை டிடிவி தினகரன் சபாநாயகரிடம் அளித்து முறைப்படி எம்எல்ஏவாக பதவி பிரமாணம் செய்து கொள்ள வேண்டும். அதனால் தன்னை எம்எல்ஏவாக இணைத்துக்கொள்வதற்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை நாளை மறுதினம் சபாநாயகரிடம் கொடுத்து முறைப்படி பதவி பிரமாணம் செய்து கொள்ள டிடிவி தினரகன் முடிவெடுத்துள்ளார். பதவி பிரமானம் எப்போது செய்யலாம் என்று குடும்ப ஜோதிடரிடம் டிடிவி தினகரன் கேட்டுள்ளார், அதற்கு அவர் நாளை மறுதினம் வைகுண்ட ஏகாதசி என்பதால் நாளை மறுதினம் பதவி பிரமானம் செய்து கொள்ளுங்கள் என்று குடும்ப ஜோதிடர் கூறியதுடன் உடன் செல்பவர்கள் ஒற்றை படையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாராம். அதனால் நாளை மறுதினம் தனது பதவி பிரமாணத்தின் போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருசிலரை மட்டும் பதவி பிரமாணத்தில் பங்கேற்கும் படி டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளாராம். நாளை மறுதினம் சபாநாயகர் தனபாலை சந்தித்து தேர்தல் அதிகாரி வழங்கிய சான்றிதழை கொடுத்து பதவி பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
Des : TTV Dinakaran, who won the RK Nagar midterm seat, will be eligible to resign tomorrow with some MLAs who have been disqualified from his team.