ஆர்.கே.நகர் பக்கம் போக தினகரன் பயப்படுவது ஏன்?- வீடியோ

2017-12-27 1

ஆர்.கே.நகரில் அமோக வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், இதுவரை அந்த தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்காதது ஏன் என்பது குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்த போட்டியாளர்களில், அதிமுகவுக்கு மட்டுமே டெபாசிட் தப்பியது. அவர்கள் 2வது இடத்தை பிடித்தனர்.
திமுக, பாஜக, நாம்தமிழர் மற்றும் பல சுயேச்சைகள் என மொத்தம் 57 பேர் டெபாசிட் இழந்தனர். இப்படி அமோக வெற்றி பெற்ற தினகரன், எதற்காக இன்னும், ஆர்.கே.நகருக்குள் காலடி எடுத்து வைக்க அஞ்சுகிறார், ஏன் நன்றி கூற செல்லவில்லை என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
கடந்தமுறை ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுகவில் இருந்து தினகரன் களமிறங்கினார். ஆனால் அப்போது இவர் படு ஜோராக பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில் இப்போது நடைபெற்ற இடைத் தேர்தலுக்கு முன்பாக தினகரன் தரப்புக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஐடி ரெய்டுகள் காரணமாக எங்கிருந்துமே அவர் பணத்தை எடுத்து வந்து செலவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.


TTV Dinakaran, independent candidate from RK Nagar, not visit his constituency so far. Interesting information about why he didn't met voters.