கோலியை வாழ்த்த சென்ற தோனி, சச்சின், ஏ.ஆர்.ரகுமான்- வீடியோ

2017-12-27 23,026

விராட் கோஹ்லி, அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நேற்று மாலை நடந்தது. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த 22ம் தேதி டெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மும்பை நிகழ்ச்சிக்கு கோஹ்லி முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு தான் முதல் பத்திரிகை வைத்தார். அழைப்பை ஏற்று சச்சின் தனது குடும்பத்தாருடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

தல டோணி தனது மனைவி சாக்ஷி, செல்ல மகள் ஜிவாவுடன் கோஹ்லியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஜிவா தனது தாயை போன்றே ரோஸ் கலரில் உடை அணிந்திருந்தார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அமிதாப் பச்சன் தனது மகள் ஸ்வேதா நந்தா, மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.



After a hush-hush yet dreamy wedding ceremony in Tuscany, one of the most talented actresses of the B-town, Anushka Sharma and Virat Kohli hosted a grand reception at the St. Regis, Mumbai and it was attended by who's who of the B-town.