காஜல் அகர்வால் எடுத்துள்ள முடிவு அவரின் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. லட்சுமி கல்யாணம் தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனவர் காஜல் அகர்வால். தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து வருகிறார். காஜல் நடிக்க வந்து 10 ஆண்டுகளாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் அவர் பெரிய பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான க்வீன் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல். இந்த படம் தனக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.
10 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் தனக்கென பெயர் வாங்கிக் கொடுக்கும் படங்கள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் உள்ளாராம் காஜல்.
பாரீஸ் பாரீஸ் ஹிட்டானால் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாக தேர்வு செய்து நடிக்க முடிவு செய்துள்ளாராம் காஜல். இல்லை என்றால் சினிமாவை விட்டு விலக தீர்மானித்துள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
சினிமாவில் இருந்து விலகி புதிதாக ஏதாவது தொழில் துவங்கி தொழில் அதிபராகும் ஐடியாவும் காஜல் அகர்வாலிடம் உள்ளதாம். எல்லாம் பாரீஸ் பாரீஸ் பட வெற்றியை பொறுத்திருக்கிறது.
Buzz is that Kajal Agarwal has decided to quit cinema if her latest movie Paris Parish won't become a hit. She is not happy with the way her career is going. She even reportedly decides to start a business.