திரும்பிய பக்கம் எல்லாம் மரண ஓலை… கண்ணில் தென்படும் இடம் எல்லாம் பிணங்கள்… கடந்த 2004ம் ஆண்டு கடல் தாய் கொந்தளித்து கோரத்தாண்டவம் ஆடிய ஆட்டம் நாள் இன்று….
கடந்த 2004 ம் ஆண்டு இதே நாள் தான் தமிழகத்தில் சுனாமி என்ற ஆழிப்பேரலை நிகழ்ந்தது. காலை 8 மணிக்கு கடல் தாய் கோரத்தாண்டவத்தை ஆடத்தொடங்கினாள். பல ஆயிரம் உயிர்களை தன் பசிக்கு இறையாக்கி கொண்ட சம்பவம் நடைபெற்றது இன்றுதான். சுனாமி ஆழிப்பேரழையின் கோரத்தாண்டவ நிகழ்வு இன்று 13வது ஆண்டு தொடங்கியுள்ளது. சுனாமி நினைவு நாளான இன்று உயிரிழந்தவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று வரை சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடு உடமைகளை இழந்த பெரும்பாலோனோருக்கு இன்றுவரை எந்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை அவர்களை அரசு கண்டு கொள்ளவும் இல்லை என்பது தான் வேதனைகுறியதாகி உள்ளது. சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.