இரும்புத்திரை ரகசியம் உடைத்த விஷால் !!- வீடியோ

2017-12-26 1

அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா ஆகியோர் நடித்துவரும் 'இரும்புத்திரை' படத்தில் விஷால் மற்றும் சமந்தாவின் கதாபாத்திர பெயர்கள் வெளியாகியுள்ளன. 'துப்பறிவாளன்' படத்தின் வெற்றியை அடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் நடித்துவரும் 'இரும்புத்திரை' படம் ஜனவரி மாதம் வெளிவர உள்ளது. 'இரும்புத்திரை' படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடிக்கும் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. ஜனவரி மாதம் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் சில போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஷால் மற்றும் சமந்தாவின் சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
இத்திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக அர்ஜுன் நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா 'இரும்புத்திரை' படத்தின் இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார்.
விஷால் இந்தப் படத்தில் மேஜர் கதிரவன் எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார். சமந்தா உளவியல் நிபுனர் டாக்டர்.ரதி தேவி கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த விபரங்களை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'Irumbuthirai' Post production works have reached the end. The film is scheduled to be released in January. Vishal and Samantha's names have been released in the movie 'Irumbuthirai'. Vishal has revealed this information on his Twitter page. Vishal acts as Major Kathiravan and Samantha acts as DR.RadhiDevi.

Videos similaires