அரசியலுக்கு வர போவது ரஜினி இல்லை.. விஷால் தான் !!- வீடியோ

2017-12-26 1,031

பஞ்சாங்கத்தில் சொல்லியிருப்பது எங்கள் புரட்சி தளபதியை பற்றி தான் என விஷால் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று தனது ரசிகர்களை சந்தித்து பேசினார். மேடையில் பேசிய அவர் வரும் 31ம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாக தெரிவித்தார். மேலும் தான் அரசியலுக்கு புதிது அல்ல என்றும் கூறினார்.
2018-2019 ஆம் ஆண்டுக்கான விளம்பி வருஷத்திய வாக்கிய பஞ்சாங்கத்தில் பிரபல நடிகர் கட்சி ஆரம்பிப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனை நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் செய்தியாக வெளியிட்டுள்ளது. அது ரஜினி தான் என்று பலரும் நினைக்கிறார்கள்.
நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை. அரசியல் குறித்து நான் எடுக்கும் முடிவை வரும் 31ம் தேதி அறிவிப்பேன் என்று ரஜினி இன்று கூறியதை கேட்டு அவரது ரசிகர்கள் சோர்வடைந்துள்ளனர். தலைவர் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறாரே என்று வருத்தம் அடைந்துள்ளனர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தே விஷால் படாதபாடு பட்டுவிட்டார். அதை அவர் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. இந்நிலையில் ரிஸ்க் எல்லாம் எங்கள் தலைவருக்கு ரஸ்க் மாதிரி. அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார், மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று பன்ச் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் விஷால் ரசிகர்கள்.


Vishal fans are saying that it is not Rajinikanth but their Puratchi Thalapathy who is going to enter politics as told in the Tamil New Year Vilambi. Vishal has an eye on politics and looking for the right time to make his grand entry.