சக்க போடு போடு ராஜா, வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களில் எது பெஸ்ட் என்று பதில் அளித்துள்ளார் சந்தானம். காமெடியனாக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்த சக்க போடு போடு ராஜா சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தோடு சேர்ந்து ரிலீஸானது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சந்தானம் கூறியதாவது,
சக்க போடு போடு ராஜா, வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸாகியுள்ளதே தவிர யாருக்கும், யாரும் போட்டி கிடையாது என்றார் சந்தானம்.
இரண்டு படத்தில் எது பெஸ்டா இருக்கிறது என்ற கேள்விக்கு, இது என்னங்க கதை. யாரை கேட்டாலும் அவங்க படத்தை தான் சொல்வாங்க என்று வேலைக்காரன் பற்றி தெரிவித்தார் சந்தானம்.
கமல் ஹாஸன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் யாரை ஆதரிப்பீர்கள் என்று சந்தானத்திடம் கேட்கப்பட்டது. முதலில் அவர்கள் அரசியலுக்கு வரட்டும். வந்த பிறகு அவர்கள் என்னவெல்லாம் செய்வாங்கன்னு சொல்வார்கள். அதை பார்த்த பிறகே சொல்ல முடியும் என்று சந்தானம் தெரிவித்தார்.
நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். அதில் தப்பே இல்லை. எனக்கு அரசியலுக்கு வரும் ஐடியா இப்போதைக்கு இல்லை. முதலில் கமல் சார், ரஜினி சார் வரட்டும் என சந்தானம் கூறினார்.
Actor Santhanam said that there is no competition between Sakka Podu Podu Raja and Sivakarthikeyan starrer Velaikkaran. He added that there is no competition between him and Vadivelu.