அட்டகத்தி தினேஷ் நடித்த 'ஒருநாள் கூத்து' உட்பட பல படங்களைத் தயாரித்த 'கெனன்யா பிலிம்ஸ்' தயாரித்த படம் 'உள்குத்து'. கார்த்திக் ராஜு இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், நந்திதா நடித்துள்ள இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் ஏற்கெனவே பல தடவை ரிலீஸ் தேதிகள் குறிக்கப்பட்டன. நிதி சிக்கலில் சிக்கியிருந்த 'உள்குத்து' தயாரிப்பாளர் ஜெ.செல்வகுமார், இப்போது பல பிரச்னைகளை கடந்து இன்னொருவர் மூலமாக வருகிற டிசம்பர் 29-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார். இதே நிதி பிரச்சனையால் 'கெனன்யா ஃபிலிம்ஸ்' தயாரித்துள்ள மற்றொரு படமான 'சர்வர் சுந்தரம்' படத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். 'சக்க போடு போடு ராஜா' ஹீரோயின் வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். 'உள்குத்து' வெளிவந்து அதன் ரிசல்ட்டை பொறுத்தே, தயாரிப்பாளர் சர்வர் சுந்தரம் பட ரிலீஸ் பற்றி அறிவிப்பார் என தெரிகிறது. சந்தானம் நடித்திருக்கும் 'மன்னவன் வந்தானடி', 'ஓடி ஓடி உழைக்கணும்' ஆகிய படங்களும் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில், அடுத்த படத்தில் நடிக்கவும் கமிட் ஆகிவிட்டார் சந்தானம். தயாரிப்பாளர் தரப்பில் பிரச்னைகள் தீர்ந்தால் ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
'Ulkuththu' producer J.Selvakumar, who is in financial troubles, is now releasing the film on December 29th through another producer. There is also a financial problem with another movie Santhanam's 'Server Sundaram' produced by 'Kenanya Films. 'Ulkuththu' comes out successfully then only server Sundaram film release annoncement will be made by producer.