தமிழக அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முந்தி சென்று வெற்றி பெற்றுவிட்டார்.
ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு பிறகு மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் அமில சோதனையாகவே பார்க்கப்பட்டது.திமுக ஆட்சியில் நடந்த அவலங்களை அதிமுகவும், அதிமுகவில் நடப்பதை திமுக, தினகரன் அணியினரும் மாறி மாறி மக்கள் முன்பு வைத்தனர். குற்றச்சாட்டுகளை முன்வைத்தே தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது. மேலும் நீட் தேர்வு, ஜெயலலிதா மரணம், குட்கா ஊழல், ஓகி புயல் உள்ளிட்டவை இந்த தேர்தலில் பிரதிபலித்தன.சுமார் 19 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில் தினகரன் 89,013 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரை குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டார். மதுசூதனனை காட்டிலும் 40707 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் சாதனை பெற்றுவிட்டார்.
First time in TN History, in a by poll, Independent candidate has won the ruling and opposition party.