வீர மரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியின் கல்லறையில் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். அப்போது கல்லறையில் ஆதரவாளர்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதுடன் விசில் அடித்து ஆரவாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி இராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது மரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான சங்கரன் கோவில் அருகே மூவிருந்தாளி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் சென்ற அவரது ஆதரவாளர்கள் கல்லறையில் டிடிவி அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கும் போது டிடிவி வாழ்க என்றும் வருங்கால முதல்வரே என்றும் கோஷங்களை எழுப்பினர். அது மட்டும் இன்றி விசில் அடித்தும் கைகளை தட்டியும் ஆரவாரம் செய்தனர். மறைந்தவரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது ஆதரவாளர்கள் மவுன அஞ்சலி செலுத்தாமல் குஷியாக ஆரவாரம் செய்ததற்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியின் குடும்பத்தினர் மற்றும் இன்றி அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.