ஆர்கே நகர் தேர்தலில் தப்பித்த விஷால், தீபா, கங்கை அமரன்!- வீடியோ

2017-12-24 674

ஆர்.கே நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கங்கை அமரன், விஷால், தீபா ஆகிய மூவரும் போட்டியிடவில்லை. ஒருவேளை எல்லாம் சரியாக கை கூடி வந்து இவர்கள் போட்டியிட்டு இருந்தால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்க வாய்ப்புள்ளது. மேலும் அரசியலில் இவர்களுக்கு இது பெரிய அனுபவமாக அமைந்துள்ளது. சென்ற தேர்தலில் போட்டியிட்ட கங்கை அமரன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த விஷால், தீபா ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையின் 4 சுற்றுகளிலும் தினகரன் முன்னிலை வகிக்கிறார். 20 ஆயிரம் வாக்குகளை தாண்டி சென்று கொண்டு இருக்கிறார். அதே சமயத்தில் மற்ற எந்த வேட்பாளரும் 10 ஆயிரம் வாக்குகள் கூட எடுக்காமல் பின் தங்கி உள்ளனர். முக்கியமாக தேசிய கட்சியான பாஜக டெபாசிட் இழக்கும் நிலைமையில் இருக்கிறது.
சென்ற முறை ஆர்.கே நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பாஜக வேட்பாளராக அங்கு களம் இறங்கியவர் கங்கை அமரன். ஆனால் எம்.எல்.ஏ ஆகும் அவரது கனவு நிறைவேறாமல் போய், தேர்தல் பாதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அறிவிக்கப்பட்ட தேர்தலில் அவர் பாஜக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.

Vishal, Gangai Amaran, Deepa has literally escaped from RK Nager election. May be this election result may give a nightmare to them.

Videos similaires