ஆர்கே நகரில் பணபலத்தால் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்ட தேர்தல் இது!- வீடியோ

2017-12-24 6,380

டிடிவி தினகரன் ஜெயித்தால், அதை நினைத்து ஒரு பெர்சன்ட் கூட மக்கள் சந்தோஷப்படக் கூடாது என்பதுதான் ஆர்.கே.நகரிலிருந்து பொதுமக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக இருக்க முடியும். அதை விட முக்கியாக, எதிர்காலத்தில் மக்கள், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களைப் போல நடக்கக் கூடாது என்பதற்கும் இது நல்ல பாடமாக அமையும். மோசமான குழந்தை, நல்ல குழந்தை என்று சொல்வார்கள் இல்லையா. அது போலத்தான், இப்போது ஆர்.கே.நகர் வாக்காளர்கள் மோசமான குழந்தையாக மாறி நிற்கின்றனர். ஏன் தினகரனை அவர்கள் தேர்வு செய்தார்கள் என்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் இருக்க முடியம் என்பது தெரியவில்லை.

ஆனால் ஆர்.கே.நகரை விட்டு விலகி நின்று பார்த்தோமானால் காசு பணம் துட்டு மணி மணி என்ற பாட்டுதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பணம் விளையாடி விட்டது.
முதல் முறையாக இந்த இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே வரலாறு காணாத அளவுக்கு பணம் விளையாடியது. அதிமுக தரப்பு பணத்தைக் கொட்டிக் குவித்தது. அப்போது ஆளும் அதிமுக சார்பாக நின்றவர் தினகரன். ஸோ, யார் பணம் கொடுத்திருப்பார் என்பதை பச்சைக் குழந்தை கூட பளிச்சென சொல்லி விடும்

No dobut this is a very very strange by poll in many manner, cash power has won in RK Nagar by election