ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் களமிறங்கியும் திமுக தடுமாறி வருகிறது. ஆர்கே நகர் தொகுதிக்கு கடந்த ஓராண்டுக்குப் பிறகு பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கரு நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. சென்னை ராணிமேரி கல்லூரியில் 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதன் முதல் சுற்றின் முடிவில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் 1891 வாக்குகள் பெற்றுள்ளார். 647 வாக்குகளுடன் இரண்டாமிடத்தில் அதிமுகவின் மதுசூதனனும் 361 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தில் திமுகவின் மருதுகணேஷும் உள்ளனர்.
DMK is down in RK Nagar by poll. DMK Candidate Maruthu ganesh is at 3rd place with less votes.