பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி தற்போது அப்பள விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டு உலக தமிழர்களிடையே பிரபலமானார் ஜூலி. இதனை காரணமாக வைத்து விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே தன்னை கட்டிப்பிடிக்க யாருமே இல்லை என நடிகர் ஸ்ரீயிடம் புலம்பி ஒரே நாளில் ஒட்டுமொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் செய்த காரியங்கள் எல்லாம் தமிழக மக்களிடையே அவர் மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக ஓவியாவை காயத்ரி ரகுராமுடன் சேர்ந்துகொண்டு அவர் படுத்தியபாடு மக்களிடையே அவர் மீது உச்சக்கட்டத்தை ஏற்படுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி என்றாலே போலி என்ற பிம்பம் தோன்றியது.
சமூக வலைதளங்களில் ஜூலியை வைத்து ஏராளமான மீம்ஸ்களும் ட்ரோல் வீடியோக்களும் வெளியிடப்பட்டது. ஜூலி டிவிட்டரில் வாய்திறந்தாலே அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
Biggboss Julie acting in a add film about Appalam. Julie name spoiled after participating in the Biggboss show. She was cornering Oviya in the Biggboss program.