ஆர்கே நகரில் பணத்தை திருப்பி கேட்கும் அரசியல் புள்ளிகள்... பயந்து ஓடும் வாக்காளர்கள்- வீடியோ

2017-12-22 25,748

ஆர்.கே.நகரில் அரசியல் கட்சியினரும், விஐபி சுயேட்சை வேட்பாளரும் பணத்தை வாரி இறைத்து வாக்கு சேகரித்ததாக புகார்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தால் ஒரு அளவுக்கு மேல் எதையும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் தேர்தலை ரத்து செய்தால் அது வெளிப்படையாக தோல்வியை ஒப்புக்கொண்டதாகிவிடும் என நினைத்த அதிகாரிகள் 'எப்படியோ போங்க' என்பதை போல தேர்தலை நடத்தி முடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பணம் கொடுத்தபோது, எங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கியதாக கூறப்படுகிறது.

சத்தியத்தை மீறக்கூடாதே என்ற தமிழக மக்களின் மாண்பு (!) வாக்குச்சாவடிகளை நோக்கி கூட்டம் கூட்டமாக அவர்களை உந்தி தள்ளிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதனால்தான் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது ஆர்.கே.நகர்.
வாக்களித்துவிட்டு கையில் பூசப்பட்ட மையை காண்பிக்க வேண்டும், அல்லது பணம் திரும்ப வாங்கிக்கொள்ளப்படும் என்று இலை கட்சியும், விஐபி சுயேட்சை வேட்பாளரும் கூறியிருந்தார்களாம். இங்குதான் சிக்கல் எழுந்துள்ளது.

Complaints of political parties and VIP independent candidate in RK Nagar have collected money. The leaf party and the VIP independent have said that they will vote and should show hand or give the money back. Here's a problem

Free Traffic Exchange

Videos similaires