தன் அணியினர் அரசுடன் ஒத்துபோனால் நிறைய பலன் கிடைக்கும்…. டிடிவி தினகரன் பேட்டி- வீடியோ

2017-12-22 861

தன்னுடைய அணியை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அரசுடன் ஒத்து போனால் அவர்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். ஆனால் அவற்றை எல்லாம் உதறி தள்ளிவிட்டு எங்கள் அணியில் அவர்கள் உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் டிடிவி தினகரன் நேற்று தேர்தல் முடிவு பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எடுத்த வீடியே படத்தை தனது ஆதரவாளர் வெற்றி வேல் வெளியிட்டது குறித்து தமக்கு தெரியாது என்றார். வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ பதிவு நவம்பர் மாதம் எடுக்கப்பட்டது என்றும், ஜெயலலிதா அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறிய அவர் தன்னுடைய அணியில் இருப்பவர்கள் அரசுடன் ஒத்துப்போனால் நிறைய பலன்கள் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் அதை எல்லாம் உதறி தள்ளிவிட்டு தான் தன்னுடைய அணியில் அவர்கள் இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.

Des : If MLAs, who belong to his team, agree with the state, they will get a lot of benefits. But all of them have been dismissed and they are in our team, TTV Dinakaran said

Videos similaires