தெலுங்கானாவில் பிரியாணியில் விஷம் கலந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன்தொல்லையால் தமிழகத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானாவிலும் இதுப்போன்ற நிலைமை அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் யாதத்ரி-புவனகிரி மாவட்டம் ராஜாபேட்டை சேர்ந்தவர் பால ராஜ். 44 வயதான இவருக்கு திருமலா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளுக்கும் உள்ளனர்.
பால்ராஜ் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை பால்ராஜ் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது பால்ராஜ் உள்ளிட்ட 7 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் 7 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.