காதலர்களான கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா நடுவே சமீபத்தில் இத்தாலியில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, டெல்லியிலுள்ள, தாஜ் பேலஸ், ஸ்டார் ஹோட்டலில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களுக்கு் கோஹ்லி தம்பதி அழைப்புவிடுத்திருந்தனர். இதையேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்று தம்பதிகளை வாழ்த்தினர்.
கிரிக்கெட் வீரர்கள், ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரும், நட்சத்திர ஹோட்டல் வந்திருந்து, தம்பதிகளை வாழ்த்தினர். மற்ற இந்திய வீரர்கள், மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற உள்ள இந்தியா-இலங்கை அணிகள் நடுவேயான டி20 போட்டியில் பங்கேற்க சென்றுள்ளதால் அவர்களால் இதில் பங்குபெற முடியவில்லை.
விராட் மற்றும் அனுஷ்காவுக்கு சப்யாசசி முகர்ஜி என்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஆடைகளை வடிவமைத்து கொடுத்திருந்தார். அவரும் ரிஷப்ஷனில் கலந்து கொண்டார். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மேடையில் தம்பதிகள் நின்றிருந்தனர். இருப்பினும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தம்பதிகள் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து பஞ்சாபி பாடலுக்கு அசத்தல் நடனமாடினர்.
India cricket captain Virat Kohli and wife Anushka Sharma's much-anticipated wedding reception was held at the Taj Palace, New Delhi on Thursday night.